Thursday, December 26, 2024
HomeLatest Newsமலேசியாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர் தொழிலாளர்களை அனுப்பும் முயற்சி முறியடிப்பு!

மலேசியாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர் தொழிலாளர்களை அனுப்பும் முயற்சி முறியடிப்பு!

இந்தோனேசியாவின்  ரியாவ் தீவுகளிலிருந்து மலேசியாவுக்கு படகு மூலம் 7 இந்தோனேசிய தொழிலாளர்களை கடத்தும் முயற்சியினை இந்தோனேசிய காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். 

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது தொழிலாளர்களை ரியாவ் தீவுகளின் Batam பகுதியிலிருந்து மலேசியாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாட்டை மேற்கொண்ட முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 துறைமுகத்திலிருந்து தொழிலாளர்கள் படகில் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்த தருணத்தில் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்டிருக்கின்றனர். 

மலேசியாவில் உள்ள ஒரு முக்கிய தொழிலதிபர் சட்டவிரோதமாக இந்தோனேசிய தொழிலாளர்களை மலேசியாவுக்கு கடத்துவதற்கான ஏற்பாட்டை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மலேசியாவில் இந்தோனேசிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்காக தற்போது கைதான முகவருக்கு மலேசிய தொழிலதிபர் பணம் செலுத்தி வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

Recent News