Thursday, December 26, 2024
HomeLatest Newsலண்டன் – ஹீத்ரோ விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதி விபத்து!

லண்டன் – ஹீத்ரோ விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதி விபத்து!

லண்டன் – ஹீத்ரோ விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று மாலை, இந்த விபத்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஸ்லாந்து விமானம் மற்றும் கொரியன் ஏர் விமானம் ஆகியவை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின் போது யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதை உறுதிப்படுத்த அவசர சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், பயணிகள் தங்கள் விமானங்களின் நிலையை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Recent News