Thursday, December 26, 2024
HomeLatest Newsதோனியின் பெயரில் பிஸ்கட் அறிமுகம்! வைரலாகும் புகைப்படம்

தோனியின் பெயரில் பிஸ்கட் அறிமுகம்! வைரலாகும் புகைப்படம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியின் பெயரில் ஒரு வகை பிஸ்கட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வகை பிஸ்கட்டை வொரியோ பிஸ்கட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சாக்லேட் சுவை கொண்ட பிஸ்கெட்டாக தயாரிக்கப்படும் இது நுகர்வோர் மத்தியில் பிரபலமாக இருக்கும் என்று குறித்த நிறுவனம் நம்புகின்றது.

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனிக்கு தமிழகத்தில் அதிகளவில் இரசிகர்கள் காணப்படுகின்றனர்.

இந்நிலையில் குறித்த பிஸ்கட்டினை முதலில் தமிழகத்தில் அறிமுகப்படுத்த வொரியோ நிறுவனம் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மகேந்திரசிங் தோனி குறித்த நிறுவனத்துடன் கலந்துரையாடியுள்ளதுடன், சர்வதேச தரச்சான்றினை பெற்று கையளிக்கமாறு கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News