Friday, December 27, 2024
HomeLatest Newsஇலங்கைக்கு 1.5 மில்லியன் யூரோக்களை வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

இலங்கைக்கு 1.5 மில்லியன் யூரோக்களை வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 1.5 மில்லியன் யூரோக்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நாட்டு மக்களைப் பாதிக்கும் சமூக பொருளாதார நெருக்கடிக்கு இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

மக்களின் உடனடித் தேவைகளான உணவு, சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு போன்றவற்றுக்கு இந்தப் பணம் வழங்கப்பட உள்ளது.

இலங்கையில் மில்லியன் கணக்கான மக்களின் உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவர்கள் சமூக பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் ஐரோப்பிய ஒன்றிய நெருக்கடி முகாமைத்துவ ஆணையாளர் ஜனுஸ் லெனாச்சிக் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய மனிதாபிமான நிதியத்தின் மூலம் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு ஆதரவை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recent News