Wednesday, May 8, 2024
HomeLatest Newsஅச்சம் களைந்து நாட்டில் முதலீடுகளை செய்ய புலம்பெயர் இலங்கையர்கள் முன்வர வேண்டும்! விடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு

அச்சம் களைந்து நாட்டில் முதலீடுகளை செய்ய புலம்பெயர் இலங்கையர்கள் முன்வர வேண்டும்! விடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு

இலங்கைக்கு வெளிநாட்டில் உள்ள புலம்பெயர் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் முதலீடுகளை வழங்க முன் வர வேண்டும் என மைனஸ் மற்றும் ப்விகோ நிறுவன பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் கொழும்பு ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலிலே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தனர்.

அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் புலம்பெயர் முதலீட்டாளர்களின் முதலீடுகள் எமது நாட்டிற்கு தேவையாக இருக்கின்றது. அந்த முதலீடுகளை எவ்வாறு நாம் இலங்கைக்கு கொண்டு வருவதும், இலங்கையை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடலே இன்று நடைபெறவுள்ளது.

கடந்த காலங்களில் யுத்தம் எமது நாட்டினை வெகுவாக பாதித்திருந்தது. இதன் விளைவாக மக்கள் புலம்பெயர்ந்து செல்ல வேண்டியேற்பட்டது. மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி ஒன்று இந்த சூழலில் ஏற்பட்டு ஒவ்வொரு இலங்கை குடிமகனின் தலையிலும் அது சொல்ல முடியாதளவிற்கு துயரத்தினை ஏற்படுத்தியதோடு வரலாறு காணாத பாதிப்பினையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்த பாதிப்பினை நிவர்த்தி செய்ய வேண்டும் எனில் புலம்பெயர் மக்களின் முதலீடுகளை கொண்டு வருவதாகும். எதிர்வரும் காலங்களில் முதலீட்டாளர்கள் இலங்கையை நோக்கி வருவதற்காக எம்மாலான உதவிகளை வழங்க நாம் தயாராக இருக்கின்றோம்.

இலங்கை வந்தால் கைது செய்யப்படுவோம், பயங்கரவாத சட்டம் எம் மீது பாய்ந்து விடுமோ என்ற அச்சம் தேவையில்லை. நம்பிக்கையோடு அனைத்து முதலீட்டாளர்களும் எமது மைனஸ் நிறுவனத்தினூடாகவும் ப்விகோ நிறுவனத்தினூடாகவும் அரசாங்கத்துடன் இணைந்து உதவி செய்ய நாம் தயாராக இருக்கின்றோம்.

கடந்த காலங்களில் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதியில் பல முதலீடுகளை மேற்கொள்ள நாங்கள் ஆவலாக இருந்தோம். சில அரச அதிகார மட்டத்தில் இருப்பவர்களின் குறைபாடுகள் அல்லது ஒத்துழைப்பு இன்மை என்பன எமக்கு மிக்கப்பெரும் பின்னடைவினை கொடுத்திருந்தது.

எதிர்வரும் கலங்களில் வடக்கு, கிழக்கில் முதலீட்டாளர்கள் தமது வேலைகளை செய்வதற்கு இலகுவான ஒரு சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என அரச அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

புதிய தொழிநுட்பம், விஞ்ஞான ரீதியான அம்சங்களை உட்புகுத்துவதன் ஊடாக மிகப்பெரும் மாற்றத்தினை விவசாய புரட்சியின் ஊடாக பொருட்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் பொழுது அந்நியச்செலாவணியை ஈட்டிக்கொள்வதோடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியும்.

கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை உற்பத்தி செய்வதற்கு சோளம் ஒரு எடுபொருளாக உள்ளது. எனவே இந்த சோளம் உற்பத்தியினை எமது நாட்டில் உற்பத்தி செய்துகொண்டு தொழில்நுட்ப முறையினூடாக சிறந்த தீவனங்களை உற்பத்தி செய்து முதலீட்டினை பெற்றுக்கொள்ளலாம்.

புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ், சிங்கள மக்கள், இஸ்லாமியர் அனைவரும் அச்சம் களைந்து இலங்கை நாட்டில் முதலீடுகளை வழங்க முன்வர வேண்டும்.- என்றனர்.

Recent News