Thursday, December 26, 2024
HomeLatest Newsமுதல் ’ராணி எலிசபெத் II’ விருதை வென்றெடுத்த பிரித்தானிய பெண் அமைச்சர்

முதல் ’ராணி எலிசபெத் II’ விருதை வென்றெடுத்த பிரித்தானிய பெண் அமைச்சர்

ராணி இரண்டாம் எலிசபெத் பெயரில் ஆண்டின் சிறந்த பெண் என்ற சாதனை விருதை முதன்முதலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரித்தானிய அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் பெற்றுக்கொண்டுள்ளார்.

மறைந்த பிரித்தானிய மகா ராணி 2 ஆம் எலிசபெத் நினைவாக அவரது பெயரில் முதன்முறையாக இந்த ஆண்டு முதல், “ராணி எலிசபெத் II விருது” வழங்கும் விழா லண்டனில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த ஆண்டின் சிறந்த பெண்ணாக” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன் விருதை வென்றெடுத்ததுள்ளதுடன் , அவர் சார்பாக அவரது பெற்றோர் விருதை பெற்றுக்கொண்டனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன், லண்டனில் வாழ்ந்து வரும் நிலையில் பிரித்தானியாவின் புதிய பிரதமர் லிஸ் டிரஸ் அமைச்சரவையில் உள்துறை செயலாளராக 42 வயதான சுயெல்லா பிரேவர்மேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் லண்டனில் நடந்த விழாவில் காணொலி மூலம் பேசிய சுயெல்லா பிரேவர்மேன், ஆசிய சாதனையாளர் விருதுகள் 2022 விழாவில், புதிய பாத்திரத்தை ஏற்பதை தன் வாழ்நாள் பெருமையாக கருதுவதாகவும், இந்த உயரிய விருதை, மறைந்த பிரித்தானிய ராணி 2ஆம் எலிசபெத்துக்கு அர்ப்பணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recent News