Thursday, December 26, 2024
HomeLatest Newsமலேசியாவில் வேலைவாய்ப்பு; கடத்தல்காரர்கள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

மலேசியாவில் வேலைவாய்ப்பு; கடத்தல்காரர்கள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

மலேசியாவில் வேலை வழங்குவதாகக் கூறி விண்ணப்பங்கள் மற்றும் தகவல்களைச் சேகரிக்கும் கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

மலேசியாவில் இருந்து இந்த நாட்டிற்கு கிடைக்கும் 10,000 வேலை வாய்ப்புகள் தொடர்பாக பல்வேறு தொடர்புகளை முன்னிலைப்படுத்தி விண்ணப்பங்கள் மற்றும் தகவல்களை சேகரிக்கும் பணியில் கடத்தல்காரர்கள் ஏற்கனவே செயற்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.

மலேசியாவில் பணிக்கு அனுப்பப்படும் இலங்கையர்களிடம் இருந்து எவ்வளவு பணம் வசூலிக்கப்படும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

Recent News