Thursday, December 26, 2024
HomeLatest NewsIMF இன் கடன் உதவி இந்த வருட இறுதிக்குள்!

IMF இன் கடன் உதவி இந்த வருட இறுதிக்குள்!

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்ட விரிவான நிதி வசதிக்கு இந்த வருட இறுதிக்குள், அங்கீகாரம் வழங்கப்படும் என நம்பப்படுகிறது.

நேற்று முதலீட்டாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இவ்வாறு நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை மேலும் தெரிவித்துள்ளது.

Recent News