Sunday, December 29, 2024
HomeLatest Newsஇலங்கைக்கு வருகை தரவுள்ள அமரிக்காவின் தூதுவர் சின்டி மெக்கெய்ன்!

இலங்கைக்கு வருகை தரவுள்ள அமரிக்காவின் தூதுவர் சின்டி மெக்கெய்ன்!

ரோமில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய முகவர் நிலையங்களுக்கான அமரிக்காவின் தூதுவர் சின்டி மெக்கெய்ன் செப்டம்பர் 25-28 வரை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்

மேலும், கொழும்பில் உள்ள சிரேஸ்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் உதவி நிறுவன அதிகாரிகளை சந்திக்கும் அவர், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மத்திய மாகாணத்திற்குச் சென்று பாடசாலைகள், விவசாய ஆராய்ச்சி வசதிகள் மற்றும் சமூக அமைப்புகளின் செயற்பாடுகள், இலங்கை அரசாங்கத்தின் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் உதவி திட்டங்கள் குறித்து ஆராயவுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, சர்வதேச விவசாய மேம்பாட்டு நிதி மற்றும் உலக உணவுத் திட்டம் ஆகிய மூன்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனங்களுக்கு அமெரிக்கா மிகப்பெரிய அளவில் நன்கொடைகளை வழங்கி வருகிறது.

அமெரிக்க நிதியுதவியுடன் கூடிய ஐக்கிய நாடுகளின் திட்டங்கள், நாடுகளின் உணவுப் பாதுகாப்பு, மனிதாபிமான நிவாரணம், வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் விவசாயம் சார்ந்த பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு ஒத்துழைக்கின்றன.

Recent News