Thursday, December 26, 2024
HomeLatest Newsஉக்ரைனிற்கு விசாரணைக் குழுவை அனுப்ப சர்வதேச நீதிமன்றம் தீர்மானம்

உக்ரைனிற்கு விசாரணைக் குழுவை அனுப்ப சர்வதேச நீதிமன்றம் தீர்மானம்

உக்ரைனில் நடைபெற்று வரும் போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நீதிமன்றத்தின் சிறப்பு குழு ஒன்று உக்ரைனிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இதனைத் தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்ற பிரதான சட்ட அறிஞர் கரீம்கான், கிழக்கு உக்ரைன் பிரதேசத்தில் நடைபெற்றுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பாகத் தொடர்ந்து பல்வேறு விதமான தகவல்கள் கிடைத்து வருவதால் அங்கு சென்று விசேட விசாரணைகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக குழு ஒன்றை அனுப்ப உள்ளதாகக் கூறியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடும் போது, “நான் பார்த்த புகைப்படங்கள் மிகவும் வேதனை அடைய செய்கின்றன. இந்த சந்தர்ப்பத்தில் சட்டத்தின் பாதுகாப்புத் தேவைப்படுபவர்களிற்கு சட்டத்தின் உண்மையான பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.”

இது தொடர்பாக உக்ரைன் வெளிவிவகார அமைச்சர், டிமிட்ரோ குலேப குறிப்பிடும் போது, சர்வதேச நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் தனக்கு பூரண நம்பிக்கை இருப்பதாகவும், ரஷ்யா அதன் குற்றங்களிற்குப் பதில் கூறியே ஆக வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் இதற்காக சிறப்பு குழு ஒன்றை அமைக்க ஏனைய நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

Recent News