Thursday, December 26, 2024
HomeLatest Newsபாகிஸ்தானையும், இலங்கையையும் காத்திருக்க வைத்துள்ள சீனா!

பாகிஸ்தானையும், இலங்கையையும் காத்திருக்க வைத்துள்ள சீனா!

பாகிஸ்தானையும், இலங்கையையும் கடன் ஒப்பந்தங்களுக்காக சீனா காத்திருக்க வைத்துள்ளது என்று தி ஹிந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் பீய்ஜிங்கின் உதவிக்காக நீண்டகால பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

எனினும் இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தைகளில் பாரிய முன்னேற்றங்கள் இன்மையால், சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்தன.

சீனா, இந்த இரண்டு நாடுகளுக்கும் கடந்த 5 ஆண்டுகளில் 26 பில்லியன் டொலர்களை கடனாக வழங்கியுள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் பாக்கிஸ்தான் அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடன் நிதியுதவி உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டது.

இதனையடுத்து அந்த நாடு, சீனாவுக்கு செலுத்த வேண்டிய கடன்களை மறுசீரமைக்க முயல்கிறது.

இலங்கையை பொறுத்தவரை, இலங்கையின் தற்போதைய கடனை மறுசீரமைப்பதற்குப் பதிலாக, ஏற்கனவே பெரும் கடனில் உள்ள பொருளாதாரத்திற்கு புதிய கடன்களை வழங்குவதையே விரும்புவதாக பீய்ஜிங் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை இலங்கைக்கு தொடர்ந்தும் நீண்ட கால அடிப்படையில் உதவப்போவதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இன்று அறிவித்துள்ளது.

Recent News