Thursday, December 26, 2024
HomeLatest Newsஎச்ஐவி நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

எச்ஐவி நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

18-25 வயதிற்குட்பட்ட எச்ஐவி நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய STD மற்றும் HIV தடுப்பு திட்ட பணிப்பாளர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒகஸ்ட் மாதத்தில் பாதிக்கப்பட்ட 50 பேரில் 18 பேர் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சுமார் 2300 பேர் தடுப்பூசியை எடுத்துக்கொள்வதாகவும், சுமார் 3700 பேர் தடுப்பூசியைப் பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர்கள் என இனங்காணப்படாத சுமார் 1400 பேர் சமூகத்தில் வாழ்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Recent News