Thursday, December 26, 2024
HomeLatest Newsஈரானில் வெடித்தது போராட்டம்: இராணுவத்தினர் துப்பாக்கி சூடு!

ஈரானில் வெடித்தது போராட்டம்: இராணுவத்தினர் துப்பாக்கி சூடு!

ஈரானில் குர்திஷ் மகாணாத்தில் குர்திஷ் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் மயங்கி விழுந்து இறந்த இந்த சம்வத்தைத் தொடர்ந்து மக்கள் போராட்டம் நாடு தழுவிய ரீதியில் வெடித்துள்ளது.

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வீதிகளில் இறங்கி இறந்த பெண்ணுக்கு நீதி கோரியும் அரசிற்கெதிராகவும் தற்போது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் பொதுமக்களை நோக்கி இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்துவதாகவும் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இதுவரை 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 2பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மேலும் மரணமடைந்த பெண்ணிண் இறப்பிற்கு காரணம் அவருக்கு ஏற்கனவே தலையில் இருந்த நோய் எனவும் அப்பெண் குர்திஷ் இனத்தைச் சேர்ந்த மக்களின் அறநெறி ஒழுக்கங்களுக்கு முரண்பட்ட வகையில் தலை மற்றும் முகத்தை மறைக்காது காணப்பட்டமையினால காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டதாகவும் அதன் போதே அவருக்கு நோய் இருப்பது அறியக் கிடைத்ததாகவும் காவல் துறை அதிகாரி தெரிவித்திருக்கின்றார்.

Recent News