Wednesday, December 25, 2024
HomeLatest Newsஎல்லையில் மாட்டிக் கொண்ட பாக்கிஸ்தான் ட்ரோன்கள்

எல்லையில் மாட்டிக் கொண்ட பாக்கிஸ்தான் ட்ரோன்கள்

இந்திய மற்றும் பாக்கிஸ்தான் எல்லைப் பகுதிகளான ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் சம்பா என்னும் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் விமானம் ஒன்று பறந்ததாக கிராம மக்களினால் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அதிரடி விமான ரோந்து நடிவடிக்கையில் பாக்கிஸ்தானின் ஆளில்லாத ட்ரோன்கள் எல்லை தாண்டி வந்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிறிது நேரம் மேற்படி பிரதேசத்தில் பதற்றம் நிலவியதாகவும் பின்னர் இந்த விடயம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டத்தைத்  தொடர்ந்து நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

பாக்கிஸ்தானின் ஆளில்லாத ட்ரோன் விமானம் பறந்தமைக்கான ஆதாரங்களை கிராமவாசிகள் கைத்தொலைபேசிகளில் படம் எடுத்து வைத்திருப்பதாகவும் எல்லைப் பாதுகாப்பு படையதிகாரி தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News