ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா குடிநீர் கட்டண பாக்கியை செலுத்த வேண்டிய 76 பாராளுமன்ற உறுப்பினர்களில் 15 பேர், 32 இலட்சம் ரூபா குடிநீர்க் கட்டணத்தை செலுத்தாமல் உயிரிழந்துள்ளதாக நீர் வழங்கல் சபை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அவர்களிடமிருந்து வரவேண்டிய தொகையை மீளப் பெறுவது கடினம் எனவும், தற்போது அமைச்சுப் பதவிகளை வகித்து வரும் எம்.பி.க்கள் கூட தங்களுடைய குடியிருப்புகளில் பாரியளவில் தண்ணீர் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சுப் பொறுப்புகளை வகிக்கும் எம்.பி.க்கள் உட்பட 34 பேர் குடிநீர் கட்டணமாக 44 இலட்சம் ரூபாவையும், தற்போது பாராளுமன்ற பொறுப்புக்களை வகிக்காத 27 பேர் 41 இலட்சம் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
அவர்களிடமிருந்து இந்தப் பணத்தை மீட்பது பெரும் சவாலாக இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.