ரஷ்ய இராணுவத்தின் மனித உரிமை மீறல்களின் உறுதியான அடையாளமாக மூன்றாவது மனித புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் முதல் இரண்டு புதை குழிகளும் போரின் ஆரம்பத்தில் கண்டு பிடிக்கப்பட்டாலும் தற்போது கண்டு பிடிக்கப்பட்ட மூன்றாவது புதைகுழி மிகவும் மோசமான புதைகுழி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய படைகள் கைவிட்டுச் சென்ற பகுதிகளில் தற்போது உக்ரைன் இராணுவம் குவிக்கப்பட்டு தேடுதல் மற்றும் கண்ணி வெடி அகற்றல் போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மேற்படி மனித புதைகுழியொன்று கியேவ் நகரில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த புதை குழியில் சுமார் 440ற்கும் மேற்பட்ட கொலை செய்யப்பட்டு இறந்த மனித உடல்கள் காணப்படுவதாகவும் அதில் உக்ரைன் இராணுவ சீருடையுடன் 15 பேரின் உடல்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தாக்குதல்களில் இறந்தவர்கள் மற்றும் ரஷ்ய படைகளினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளின் பின்னர் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் இவை என உக்ரைன் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்ட இரண்டு புதைகளும் புச்சா மற்றும் மரியுபோல் நகரங்களில் என்பதும் குறிப்பிடத்தக்கது.