Friday, June 13, 2025
HomeLatest Newsகார் விபத்தில் சிக்கிய உக்ரைன் அதிபர்!

கார் விபத்தில் சிக்கிய உக்ரைன் அதிபர்!

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கார் விபத்தில் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை உக்ரைன் ஜனாதிபதியின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என உக்ரைன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, தனது பாதுகாப்புப் பணியாளர்களுடன், தலைநகர் கியேவ் நகரின் வழியாக மோட்டார் அணிவகுப்பில் சென்று கொண்டிருந்தபோது அதிவேகமாக வந்த கார் அதிபரின் கார் மீது மோதியது.

காரின் சாரதி படுகாயமடைந்துள்ளதாகவும், அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சிறப்பு மருத்துவக் குழு ஜனாதிபதி ஜெலென்கியை பரிசோதித்தது மற்றும் அவரது காயங்கள் பெரிதாக இல்லை என்பதை உறுதிப்படுத்தியது, ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் செர்ஜி நிகிபரோவ் மேலும் தெளிவுபடுத்தினார்.

Recent News