உக்ரைனில் ரஷ்யாவின் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு அவசரகால நிதியுதவி வழங்குவதற்கான வழிகளை சர்வதேச நாணய நிதியம் ஆராய்ந்துவருகின்றது.
உணவு விலை அதிகரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு இந்த உதவியை வழங்குவது குறித்து இன்று கலந்துரையாடல் இடம்பெறும் என ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு நிபந்தனைகளை விதிக்காமல் இந்த நிதிஉதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் இன்னும் பரிசீலனையில் இருப்பதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.