Thursday, December 26, 2024
HomeLatest Newsபுதிய மன்னருக்கு வாழ்த்து தெரிவித்த சீன அதிபர்

புதிய மன்னருக்கு வாழ்த்து தெரிவித்த சீன அதிபர்

சீனாவின் அதிபர் “ஜி ஜின்பிங்” புதிதாக அரியணை ஏறியுள்ள இங்கிலாந்தின் புதிய மன்னர் “மூன்றாம் சார்ள்ஸ்” மன்னருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றார்.

சீனாவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் புதிய நட்புறவுகளை எறபடுத்த மன்னர் ‘மூன்றாம் சார்ள்ஸ்’ முயற்சிகளை எடுப்பார் என தாம் நம்புவதாகவும், கடந்த பல தசாப்தங்களாக இரு நாடுகளுக்குமிடையில் நல்ல உறவு நிலை காணப்படவில்லை எனவும் சீனாவை பிரித்தானியா எதிரியாகவே பார்த்து வந்ததாகவும் ஆனால் தற்போது பிரித்தானியாவில் ஏற்பட்டிருக்கும் மாற்றமானது புதிய பாதைகளை திறந்து கொடுக்கும் என சீன அதிபர் தெரிவித்திருக்கின்றார்.

மேலும் பிரித்தானியாவின் புதிய பிரதமர் “லிஸ் ரஸ்” அவர்களுக்கும் தமது வாழ்த்துக்களையும் உறவு நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தப்படும் என்ற நம்பிக்கைளையும் வெளியிட்டிருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவித்திருக்கின்றன.

Recent News