Wednesday, December 25, 2024
HomeLatest Newsநியூசிலாந்தில் திமிங்கலம் மோதி 5 பேர் உயிரிழப்பு!

நியூசிலாந்தில் திமிங்கலம் மோதி 5 பேர் உயிரிழப்பு!

நியூசிலாந்தில் தெற்கு தீவின் கரையோர நகர மான கைகோராவில் 11 பேரை ஏற்றிச் சென்ற படகொன்று நேற்றுமுன் தினம் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர் .

இந்தப் படகை திமிங் கலம் மோதியதால் கவிழ்ந்ததாக நம்புவதாக ரேடியோ நியூசிலாந்துக்கு கைகூரா நகர மேயர் கிரேக் மேக்கிள் தெரிவித்துள்ளார் .

எனினும் இதனை பொலிஸார் இது வரை உறுதிப்படுத்தவில்லை . இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . இது பல உயிர்களை பறித்த திக்கும் ஒரு சோகமான நிகழ்வு .

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கிறேன் எனவும் கைகூரா நகர மேயர் கிரேக்மேக்கிள் நேற்று முன்தினம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரி வித்தார் .

உயிரிழந்தவர்களை முறையாக அடையாளம் காணும் பணியில் பொலி ஸார் ஈடுபட்டுள்ளனர் . உயிரி ழந்தவர் களின் பெயர்கள் எதுவும் வெளியிடப் படவில்லை . உயிர் பிழைத்த ஆறு பேர் கைகோரா சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர் .

ஒருவர் முன்னெச்சரிக்கையாக கிறிஸ்ட்சர்ச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .

Recent News