Friday, April 18, 2025
HomeLatest Newsகுறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு புதிய வீடுகள்!

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு புதிய வீடுகள்!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 1996 வீடுகள் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பேலியகொட, தெமட்டகொட, மொரட்டுவ, மஹரகம மற்றும் கொட்டாவ பிரதேசங்களில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன.

கோட்டாவில் கட்டப்படும் குடியிருப்பு வளாகம் கலைஞர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளது.

அரசியல் அடிப்படையிலோ அல்லது அரசியல் சார்பு அடிப்படையிலோ அல்லாமல் முன்னுரிமை மற்றும் முறையான தேவையின் அடிப்படையில் இந்த வீடுகள் அனைத்தையும் வழங்குவதற்கு தேவையான அமைப்பை உடனடியாக தயாரிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

Recent News