உக்ரைனுடனான போரில் ரஷ்யா அதிகளவில் ஆயுத தளபாடங்கள் மற்றும் இராணுவ வீரர்களின் எண்ணிக்கைகளில் பாரிய வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில் இராணுவ வீரர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் மும்முரமாக ரஷ்யாவில் நடைபெற்று வருகின்ற மறு பக்கத்தில் வடகொரியாவிடம் இருந்து மில்லியன் தொகையில் ஆயுத தளபாடங்களை வாங்கிக் குவித்துக் கொண்டு இருப்பதாகவும் அவற்றை போர்க் களம் நோக்கி நகர்த்திக் கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வடகொரியா தனது ஆயுத உற்பத்திகளை பெரிதளவில் உலக நாடுகளுக்கு விற்பனை செய்வதில்லை. இதனால் வடகொரியாவின் ஆயுதங்களின் வலிமை மற்றும் ஆற்றல் என்பவற்றை கணக்கிட முடியாத சூழல் காணப்படுகின்றது.
இந்த நிலையில் ரஷ்யா கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடகொரிய பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஏற்படுத்திக் கொண்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் தற்போது அதிநவீன ஆட்லறிகள், ஏவுகணைகள், ரொக்கட் குண்டுகள் உட்பட பல வகை ஆயுதங்களை கொள்வனவு செய்திருப்பதாகவும் இதன் மூலம் ரஷ்யா ஆயுத தளபாடத்தில் சிறிது வலிமையுடன் காணப்படும் என்பதுடன் உக்ரைனுக்கு உதவி செய்வதற்கு ஐரோப்பிய நாடுகளிடம் தற்போது ஆயுதங்கள் எவையும் இல்லை என்பதுடன் அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஆயுத தட்டுப்பாட்டில் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.