Wednesday, December 25, 2024
HomeLatest Newsபழங்கால டைனோசர்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

பழங்கால டைனோசர்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் சுமார் 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கா முழுவதும் சுற்றித் திரிந்ததாக நம்பப்படும் தாவரங்களை உண்ணும் டைனோசரின் எச்சங்களை ஜிம்பாப்வேயில் கண்டு பிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த டைனோசர்கள் நீண்ட கழுத்தைக் கொண்ட “சரோபோடோமார்பின்” என்னும் இனத்தைச் சேர்ந்தவைகள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வகை டைனோசர்கள் சுமார் 230மில்லியன் ஆண்டுகளுக்க முன்னர் வாழ்ந்திருக்கக்கூடும் என நம்பப்படுகின்றது. இவை 6 அடி நீளமும் 29 கிலோ எடையும் கொண்டவையாக இருந்திருக்க முடியும் என கூறப்படுவதோடு அவற்றின் எச்சங்களில் இருந்து மரபணு முறையில் மேலும் புதிய விலங்கினங்களை உருவாக்கும் அடுத்த கட்ட முயற்சி குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் விலங்கியல் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன.

Recent News