பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் காண் கடந்த மாதம் இடம் பெற்ற பொது பிரச்சாரத்தின் போது உயர் நீதிமன்றத்தின் இறையாண்மையை அவமதித்து பேசியதாக அவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நேற்றைய தினம் நீதிமன்றிற்கு வருகை தருமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி கொடுக்கபட்ட அழைப்பை ஏற்றுக் கொண்ட முன்னாள் பிரதமர் ‘இம்ரான் காண்’ தனது கட்சியான “தெஹ்ரீக்-இ-இன்சாஃப்” கட்சியின் மூத்த தலைவர்கள் சகிதம் நீதிமன்றில் பிரசன்னமாயிருந்தார் எனவும் சுமார் 2 மணி நேரங்கள் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், நடைபெற்ற சம்பவம் குறித்த அறிக்கையினை எதிர்வரும் 8ம் திகதிக்கு முன்னர் நீதிமன்றிற்கு சமர்பிக்கும்படி நீதிபதியினால் அறிவிக்கப்பட்டு ‘இம்ரான் கான்’ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பாக்கிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றில் ‘இம்ரான் கான்’ மிகவும் நிதானத்துடனும், ஒழுக்கத்துடனும் செயலாற்றியதாகவும் நீதிமன்ற விதிகளை ஒழுங்காக கடைப்பிடித்தாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.