Friday, April 11, 2025
HomeLatest Newsபாக்கிஸ்தானின் வெள்ள அனர்த்தத்திற்கு நிதி திரட்டும் முன்னாள் பிரதமர்!

பாக்கிஸ்தானின் வெள்ள அனர்த்தத்திற்கு நிதி திரட்டும் முன்னாள் பிரதமர்!

பாக்கிஸ்தானின் அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்ட முன்னாள் பிரதமர் ‘இம்ரான் கான்’ பாக்கிஸ்தானில் தற்போது ஏற்பட்டிருக்கும் கடுமையான வெள்ள அனார்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பொதுவுடமைகளின் நிவாரணத்திற்கென சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை திரட்டியுள்ளதாக பாக்கிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிதி சர்வதேசத்தினால் கிடைத்திருக்கின்ற நிதியுதவியைப் பார்க்கிலும் இரண்டு மடங்கு அதிகம் எனவும் தனிநபர் ஒருவரினால் திரட்டப்பட்ட மிகப் பெரிய நிதி எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாக்கிஸ்தானில் தற்பொது சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருவதாகவும் இந்த சர்வாதிகார ஆட்சியை முறியடிக்க மக்கள் ஒன்று சேர வேண்டும் என முன்னாள் பிரதமர் ‘இம்ரான் கான்’ வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் ‘இம்ரான் கானை’ கைது செய்து சிறையில் அடைப்பதற்கான மும்முரமான நடவடிக்கைகளில் தற்போதைய ‘நவாஸ் ஷெரிப்’ தலைமையிலான அரசு முயன்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

Recent News