பாக்கிஸ்தானில் தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக சுமார் 1,200ற்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளதாகவும் அவர்களில் 380 சிறுவர்களும் அடங்குவதாகவும் இந்த மழைவீழ்ச்சி கடந்த 30 வருடங்களில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பாதிப்பு எனவும் இதுவரை சுமார் 390.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும், இந்த வீதம் வருடாந்த மழை வீழ்ச்சியிலும் பார்க்க சுமார் 190 வீதம் அதிகம் எனவும் ஐக்கிய நாடுகள் இயற்கை அனார்த்தங்கள் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளதுடன் அவசர உதவித் தொகையாக சுமார் 160 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் சர்வதேச நாணய நிதியம் பாக்கிஸ்தானுக்கு சுமார் 1.17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை வழங்குவதாக தெரிவித்துள்ள மறுபக்கத்தில் அமெரிக்காவும் 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்குவதாகவும் அறிவித்துள்ளன.
மேலும் கனடா உட்பட சில நாடுகள் உதவியளிக்கும் நிலையில் இருப்பதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் பாக்கிஸ்தான் விரைவாக மேலெழும்ப வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியவசிய தேவைகள் உடனடியாக சந்திக்கப்படுவதற்கு பாக்கிஸ்தானின் அதிகாரிகள் விரைந்து செயற்பட வேண்டும் என சர்வதேச அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்து வருவருவதும் குறிப்பிடத்தக்கது.