உக்ரைன் – ரஷ்ய போர் 6 மாதங்களையும் தாண்டி தொடர்ந்து சென்று கொண்டு கொண்டிருக்கும் சூழலில் தற்போது தான் உக்ரைன் தனது தாக்குதலை ஆரம்பித்துள்ளதாகவும் இனி உக்ரைனின் தாக்குதல் மோசமாக இருக்கும் என நேற்றைய தினம் உக்ரைன் அதிபர் வெளியிட்ட காணொளி உரையில் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் அதிபர் செலன்ஸ்கி தனது உரையில் தெரிவித்ததாவது, “கடந்த 6 மாதங்களில் ரஷ்ய படைகள் உக்ரைனின் நிலப்பரப்புக்களில் குறிப்பாக கருங்கடலை அண்மித்த தெற்கு பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை முழுவதும் ஆக்கிரமித்திருக்கின்றார்கள்.
நாம் இதுவரை தடுத்து போர் செய்யும் முறைகளையே மேற்கொண்டிருந்தோம். ஆனால் இப்பொது தான் எமக்கு நாம் எதிர்பார்த்த அதிசக்தி வாய்ந்த ஆயுதங்கள் பல கிடைத்திருக்கின்றன. இவற்றின் உதவியுடன் நாம் எமது பதில் தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றோம். இனி ஒரு ரஷ்ய இராணுவ வீரரும் தப்ப முடியாது. உயிர் முக்கியம் என்றால் உங்கள் வீட்டிற்கு ஓடிச் செல்லுங்கள்.
போர்க் களத்தில் தொடர்ந்தும் நீங்கள் இருந்தால் உங்களுக்க சாவு நிச்சயம். உக்ரைனின் ஆட்டம் ஆரம்பமாகியிருக்கின்றது. நாம் இழந்த எமது பகுதிகளை மீண்டும் திருப்பிக் கொள்வோம். இப்போது தெற்கு பிராந்தியங்களில் கடுமையான போர் நடைபெற்று வருகின்றது. ரஷ்யாவின் முன்னணி தளங்களை உக்ரைன் படைகள் அழித்து வருவதுடன் ரஷ்யா டைகளின் பின்னோக்கிய நகர்வு ஆரம்பமாகியுள்ளதாகவும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தனது உரையில் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் உக்ரைனுக்கு ஆயுத தளபாடங்களை வழங்கிய அமெரிக்கா, பிரித்தானியா, கனடா பிரான்ஸ் உட்பட அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.