Wednesday, December 25, 2024
HomeLatest Newsஎக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகள்; அவுஸ்திரேலியாவுக்கு ஆய்வறிக்கை

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகள்; அவுஸ்திரேலியாவுக்கு ஆய்வறிக்கை

கடந்த ஆண்டு மே மாதம், தீப்பற்றுதலுக்கு உள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பல், இலங்கை கடற்பரப்பில் மூழ்கியமையினால் கடற்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தயாரிக்கப்பட்ட முதலாவது இடைக்கால ஆய்வறிக்கை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

நட்டஈட்டை பெறுவதற்காக குறித்த அறிக்கை அவுஸ்திரேலிய சட்டத்தரணிகள் நிறுவகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹதபுர குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிறுவகத்தின் அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர், சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து எதிர்கால சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recent News