கேரள மாநிலம் திருச்சூரில் கூகுள் உதவியுடன் சொத்துக்காக பெற்ற தாயை கொன்ற மகள் கைது செய்யப்பட்டார் .
கேரள மாநிலம் கீழ்குளத்தைச் சேர்ந்த சந்திரன் – ருக்குமணி தம்பதியின் மகளான இந்துலேகா , தனது கணவர் வெளிநாட் டில் பணிபுரிவதால் தாயுடன் இருந்து வந்துள்ளார் . குறித்த பெண் கணவருக்கு தெரியாமல் நகைகளை அடகு வைத்து 8 லட்சம் ரூபாய்க்கும் மேலாக கடன் வைத்துள்ளதாக கூறப்படுகிறது .
இந்நிலையில் , மஞ்சள் காமாலை அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்து லேகாவின் தாய் ருக்குமணியின் உடலில் விஷம் பரவி இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர் .
இரண்டு நாட்களுக்கு முன் ருக்குமணி உயிரிழந்த நிலையில் , காவல்துறைக்கு மருத்துவர்கள் உடல்கூற்று ஆய்வில் எலிகளை கொல்ல பயன்படுத்தப்படும் விஷ மருந்து தான் அவரது உயிரிழப்புக்கு காரணம் என தெரிவித்திருந்தனர் .
இந்துலேகாவுக்கு 8 லட்சம் ரூபாய் கடன் இருந்ததால் தாயின் வீட்டை தனது பெயருக்கு எழுதித்தர வற்புறுத்தி வந்ததும் , அதற்கு தாய் மறுத்ததால் அவரைக் கொல்ல திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது .
இந்துலேகாவின் செல்போனில் , மெதுவாக கொல்வது எப்படி ? பிடிக்கப்படாமல் கொல்வது எப்படி ? அதற்கான வழிமுறைகள் என்ன ? போன்ற தகவல்களை கூகுளில் தேடியது கண்டுபிடிக்கப்பட்டது .
பொலிசாரின் விசாரணையில் , தேநீரில் விஷம் கலந்ததையும் , உணவில் மாத்திரைகள் கலந்து கொடுத்ததையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார் . இந்துலேகாவை கைது செய்த பொலிஸார் நேரில் அழைத்துச் சென்று எலி விஷம் வாங்கிய கடை , விஷம் கலக்க பயன்படுத்திய பாத்திரங்களை சாட்சியங்களாக சேகரித்துள்ளனர் .