Saturday, April 5, 2025
HomeLatest Newsமீண்டும் வலுப்பெறும் இந்திய-ஈரான் உறவுகள்!

மீண்டும் வலுப்பெறும் இந்திய-ஈரான் உறவுகள்!

ஈரான் மற்றும் இந்தியாவிற்கிடையிலான பொருளாதார மற்றும் இராஐதந்திர உறவு நிலைகள் குறித்த அறிவிப்பு நேற்றைய தினம் இந்திய வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரானின் ‘சௌபர்’ துறைமுகத்தை மையமாக வைத்து இந்தியா ஈரானுடன் பல பொருளாதார மற்றும் போக்குவரத்து ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்த போதிலும் அவை இன்னும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் காணப்பட்டு வருவதாகவும் மிக விரைவில் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளில் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சு பிரதிநிதிகளும் ஈடுபட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ‘சௌபர்’ துறைமுகத்தை மையப்படுத்திய பொருளாதாதர வளர்ச்சிகளை மேற்கொள்வதே இரு நாட்டு உறவின் முதற் கட்டமாக இருக்கும் எனவும், இதன் படி துறைமுக அபிவிருத்தி, கடல் போக்குவரத்து மற்றும் துறைமுக பாதுகாப்பு போன்றவை இதில் அடங்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சௌபர் துறைமுகத்தை கையகப்படுத்துவதில் சீனாவும் போட்டி போட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News