சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கத்துடன், சுற்றுலாப் பயணிகளுக்கு ஓராண்டு விசா வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அத்துடன் வெளிநாட்டவர்கள் இலங்கையில் சொத்துக்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை வழங்கவும், 250,000 அமெரிக்க டொலர்களை முதலீடு செய்தால் 10 ஆண்டு விசா வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
150,000 அமெரிக்க டொலர் முதலீட்டாளருக்கு 5 வருட விசா வழங்கப்படும், மேலும் கொழும்பிற்கு வெளியே உள்ள சொத்துக்களை முதலீடு செய்பவருக்கு 75,000 அமெரிக்க டொலர்களுக்கு 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும் விசா உரிமை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், கிடைத்த வருமானம் 840 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். விசா கட்டண வசூல் முறையை எளிமைப்படுத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கோல்டன் பெரடைஸின் கீழ் இலங்கை மத்திய வங்கியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வர்த்தக வங்கியில் 100,000 அமெரிக்க டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவருக்கு 10 வருடங்களுக்கான கோல்டன் பெரடைஸ் வதிவிட விசா வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.