அடுத்த வாரம் இலங்கை திரும்பு உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்ய பல தரப்பினர் தயாராகி வருவதாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சி.ஐ.டி உட்பட நிறுவனங்களிடம் அடுத்த வாரம் முதல் முறைப்பாடு
இதனடிப்படையில், கடந்த ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஒரு கோடியே 78 லட்சம் ரூபாவுக்கும் மேல் பணம் கிடைத்தமை, இரசாயன பசளையை தடை செய்து, நாட்டின் விவசாயத்தை அழித்தமை, ஜனாதிபதி என்ற வகையில் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த அரச நிறுவனங்களில் நடந்த ஊழல் மோசடிகள் சம்பந்தமாக அடுத்த வாரம் முதல் குற்றவியல் விசாரணை திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களிடம் முறைப்பாடுகள் செய்யப்பட உள்ளன.
கோட்டாபய நீண்டகாலம் பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களுக்கு அலைந்து திரிய நேரிடும்
சட்டத்தரணிகள் உட்பட பலர் இந்த நடவடிக்கைகாக இணைந்துள்ளனர். கோட்டாபய ராஜபக்சவுக்கு தண்டனை எதுவும் கிடைக்காவிட்டாலும் அவர் நீண்டகாலம் தினமும் காலை முதல் மாலை வரை பொலிஸ் நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு அலைந்து திரிவதை தவிர்க்க முடியாது போகும் என வழக்குகளை தாக்கல் செய்ய தயாராகி வரும் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.