இன்று அதிகாலையில் வடகொரியா, மேற்கு கடல் எல்லையான “ஓன்சோனில்” இருந்து இரண்டு கப்பல் ஏவுகணைகளை வீசியுள்ளதாக தென்கொரியா குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும் வீசப்பட்ட ஏவுகணைகள் குறித்த ஆய்வுகளை அமெரிக்க படைகளுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாகவும், ஏன் தீடிரென வடகொரியா இவ்வாறு ஏவுகணை வீச்சில் ஈடுபட்டுள்ளார்கள் என்ற விடயம் இன்னும் தெரியவில்லை எனவும் தென்கொரிய தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் தென்கொரிய கூட்டு இராணு பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதைக் குறித்து தொடர் விமர்சனங்களை கடந்த சில நாட்களாக வடகொரியா வெளியிட்டு வந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.