Thursday, December 26, 2024
HomeLatest Newsபுலம்பெயர் தமிழர்களின் உதவியை எதிர்பார்த்தே தடையை நீக்குகிறோம்! பிரதமர் விளக்கம்

புலம்பெயர் தமிழர்களின் உதவியை எதிர்பார்த்தே தடையை நீக்குகிறோம்! பிரதமர் விளக்கம்

“புலம்பெயர் தமிழர்களையும் அவர்களது அமைப்புக்களையும் தடைப்பட்டியலில் வைத்துக்கொண்டு, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவர்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியாது. எனவே, அவர்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக முதற்கட்டமாக சில அமைப்புக்கள் மீதான தடைகளை நீக்கியுள்ளோம்.”

  • இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பொருளாதார நெருக்கடியால் வீழ்ச்சியடைந்த எமது நாட்டை மீளக் கட்டியெழுப்ப வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் உதவிகளைப் பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை விளக்கவுரையில் இதனை அவர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புலம்பெயர் அமைப்புக்கள் மீதும் தனிநபர்கள் மீதும் தடையை வைத்துக்கொண்டு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் உதவிகளை எதிர்பார்க்க முடியாது. இதைக் கருத்தில்கொண்டே முதற்கட்டமாகச் சில புலம்பெயர் அமைப்புக்கள் மீதும் தனிநபர்கள் சிலர் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க அரசு முடிவெடுத்துள்ளது.

தொடர்ந்து தடையில் உள்ள ஏனைய புலம்பெயர் அமைப்புக்கள் குறித்தும், தனிநபர்கள் தொடர்பிலும் அரசு அவதானம் செலுத்தும்” – என்றார்.

Recent News