Wednesday, December 25, 2024
HomeLatest Newsஇலங்கையில் விமான டிக்கெட் கட்டணம் உச்சகட்ட அதிகரிப்பு!

இலங்கையில் விமான டிக்கெட் கட்டணம் உச்சகட்ட அதிகரிப்பு!

இலங்கையில் விமான டிக்கெட் கட்டணம் உச்சக்கட்ட அதிகரிப்பை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமான டிக்கெட் கட்டணம் அமெரிக்க டொலருக்கு நிகராக அறிவிக்கப்படுதல், கட்டுநாயக்க விமான நிலையத்தினுள் விமானங்களுக்காக டர்பைன் எரிபொருள் தட்டுப்பாடு, விமான நிலைய கட்டண அதிகரிப்பு போன்ற பல காரணங்கள் இவ்வாறு விமான டிக்கெட் அதிகரிப்பிற்கு காரணமாகியுள்ளது.

இதன் காரணமாக இலங்கைக்கு வரும் விமானங்களின் எண்ணிக்கை சுமார் 60 சதவீதம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலைமை இலங்கையில் உள்ள சுற்றுலாத் துறையையும், இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு செல்லும் மக்களையும் மோசமாகப் பாதித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Recent News