Thursday, December 26, 2024
HomeLatest Newsவிராட் கோலி மீண்டு வருவார்- ஜெயவர்த்தன நம்பிக்கை!

விராட் கோலி மீண்டு வருவார்- ஜெயவர்த்தன நம்பிக்கை!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் விராட் கோலி ஃபார்ம் அவுட்டில் இருந்து மீண்டு வருவார் என்று இலங்கை அணியின் முன்னாள் கப்டன் ஜெய வர்த்தனே தெரிவித்துள்ளார் .

ஆசிய கிண்ண தொடருக்கான இந்திய அணியில் கோலி இடம் பிடித்துள்ள நிலையில் இதனை அவர் தெரிவித்துள்ளார் .

மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவர் ரன் மெஷின் என்றெல்லாம் போற்றப்படுபவர் கோலி கடந்த ஆண்டு வரை அவர் எப்போது சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது . ஆனால் , இப்போது அவர் ரன் ஸ்கோர் செய்தாலே போதும் என்ற நிலை உருவாகி உள்ளது .

டெஸ்ட் , ரி 20 , ஒரு நாள் என அனைத்து ஃபார்மெட்டிலும் எதிரணியின் பந்துவீச்சை விரட்டி விரட்டி வெளுத்து வாங்கும் வல்லமை கொண்டவர் கோலி . சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 23,726 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

இருந்தும் இப்போது மோசமான ஃபார்ம் காரணமாக மூன்று பார்மெட் கிரிக் ஓட்டம் சேர்க்க தடுமாறி வருகிறார் .

அவருக்கு இந்திய அணி பங்கேற்று விளையாடிய சில கிரிக்கெட் தொடர்களில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது .

இத்தகைய சூழலில் கோலி மீண்டு வருவார் என ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார் . விராட் கோலி தற்போது எதிர்கொண்டு வரும் சூழல் மிகவும் துரதிர்ஷ்டவசமானது . ஆனால் அவர் ஒரு தரமான ஆட்டக்காரர் . ஃபார்ம் அவுட் 196 இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புக்களை அவர் கொண்டுள்ளார் . என ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.

Recent News