Friday, December 27, 2024
HomeLatest Newsசீனாவின் இராணுவக் கப்பலிற்கு இலங்கை அனுமதி!

சீனாவின் இராணுவக் கப்பலிற்கு இலங்கை அனுமதி!

சீனாவின் யுவாங் வாங் 5 கப்பலிற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செல்லும் குறித்த கப்பலை தடுப்பதற்கான உரிய காரணங்களை இந்தியாவும் அமெரிக்காவும் முன்வைக்க தவறியுள்ளன.

இதன் காரணமாக சீனாவின் யுவாங் வாங் 5 கப்பலிற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் விவகாரம் இலங்கை அரசாங்கத்திற்கு பூகோள அரசியல் தலையிடியாக மாறியுள்ள நிலையில் எதிர்வரும் 16 ம் திகதி கப்பல் துறைமுகத்திற்குள் நுழையவுள்ளது.

குறித்த கப்பல் 11 ம் திகதி துறைமுகத்திற்குள் நுழைய திட்டமிடப்பட்டிருந்த போதும், தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி இந்தியா கரிசனை வெளியிட்டதை தொடர்ந்து பயணம் தாமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recent News