Thursday, December 26, 2024
HomeLatest Newsயாழ்.இளைஞர்களின் கதிர்காமம் நோக்கிய துவிச்சக்கரவண்டி பயணம் ஆரம்பம்!

யாழ்.இளைஞர்களின் கதிர்காமம் நோக்கிய துவிச்சக்கரவண்டி பயணம் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் – தொல்புரம் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கதிர்காமத்தை நோக்கி துவிச்சக்கர வண்டி பயணத்தில் ஈடுபடவுள்ளனர்.

குறித்த பயணமானது யாழ்ப்பாணம் – கோட்டை முனியப்பர் கோவிலடியில் இருந்து இன்றையதினம் காலை 09.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உடல் ஆரோக்கியம் போன்ற விடயங்களை எடுத்துக்காட்டும் முகமாகவே இந்த துவிச்சக்கர வண்டி பயணம் அமையவுள்ளதாக குறித்த இளைஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

தொல்புரத்தைச் சேர்ந்த குகநாதன் நிதுசன் (வயது 24) பாஸ்கரன் சுமித்தன் (22) ஆகிய இரண்டு இளைஞர்களுமே இவ்வாறு துவிச்சக்கர வண்டி பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

Recent News