Thursday, December 26, 2024
HomeLatest Newsவிநாயகர் உருவத்துடன் தங்கக் கட்டி; அரசு வெளியீடு!

விநாயகர் உருவத்துடன் தங்கக் கட்டி; அரசு வெளியீடு!

பிரித்தானியாவைச் சேர்ந்த ‘ரோயல் மின்ட்’ நிறுவனம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் உருவத்துடன் தங்கக் கட்டியை தயாரித்துள்ளது.

ஐரோப்பாவில் பிரித்தானியா அரண்மனையைச் சேர்ந்த ரோ யல் மின்ட் நிறுவனம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு மகாலட்சுமி உருவத்துடன் தங்கக் கட்டியை வெளியிட்டது.

அதுபோல 31ஆம் திகதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் உருவத்துடன் தங்கக் கட்டியை தயாரித்துள்ளது.

24 கரட் சுத்தமான தங்கத்தில் செய்யப்பட்ட இந்த தங்க கட்டியின் எடை 20 கிராம். இதன் விலை ஒரு லட்சத்து 6543 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Recent News