Thursday, December 26, 2024
HomeLatest Newsசிறைக் கைதிகளுக்கு கொரோனாத் தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

சிறைக் கைதிகளுக்கு கொரோனாத் தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

கொரோனாத்தடுப்பூசியின் நான்காவது டோஸ் சிறை கைதிகளுக்கு வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 60 வயதுக்கு மேற்பட்ட சிறைக் கைதிகளுக்கு தடுப்பூசியின் நான்காவது டோஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது, ​​இரண்டாவது டோஸ் பெற்ற கைதிகளுக்கு மூன்றாவது டோஸ் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், தடுப்பூசி போடப்படாத கைதிகளுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடப்படவுள்ளன.

முதற்கட்டமாக, வெலிக்கடை, மெகசின் மற்றும் கொழும்பு விளக்கமறியலில் உள்ள கைதிகளுக்கு பைஷர் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

Recent News