Thursday, December 26, 2024
HomeLatest Newsயாழிலிருந்து மீண்டும் இரவு நேர ரயில் சேவை!

யாழிலிருந்து மீண்டும் இரவு நேர ரயில் சேவை!

நீண்ட காலத்தின் பின் காங்கேசன்துறை – கல்கிசை இடையே இரவு நேர தொடருந்து சேவையை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி கொழும்பிலிருந்து ஆரம்பிக்கப்படும் சேவை ஓகஸ்ட் 11ஆம் திகதி இரவு காங்கேசன்துறையிலிருந்து மீள கொழும்புக்கு ஆரம்பிக்கப்படும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

முன்னர் இரவு தபால் சாதாரண தொடருந்து சேவையாக நடத்தப்பட்ட இந்த சேவையை குளிரூட்டப்பட்ட பெட்டிகளை இணைத்து வடக்குக்கான சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Recent News