Wednesday, December 25, 2024
HomeLatest Newsவயோதிபப் பெண்ணை காட்டுக்குள் கடத்திச் சென்ற 15 வயதுச் சிறுவன்! – யாழில் சம்பவம்

வயோதிபப் பெண்ணை காட்டுக்குள் கடத்திச் சென்ற 15 வயதுச் சிறுவன்! – யாழில் சம்பவம்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை காட்டுப் பகுதிக்குள், 63 வயதுடைய வயோதிபப் பெண்ணை 15 வயதுச் சிறுவன் கடத்திச் சென்று வன்புணர முயன்றுள்ளான்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த வயோதிபப் பெண் நேற்றையதினம் மீன் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தவேளை எதிரே வந்த சிறுவன் அந்த பெண்ணின் உறவினர் ஒருவரது பெயரைச் சொல்லி அவரை தெரியும் எனக்கூறினான். அதன்பின்னர் அந்த பெண்மணியை வீட்டில் விடுவதாக கூறி சைக்கிளில் ஏற்றி காட்டுப்பாதை வழியாக சென்றுள்ளார்.

“எனது வீட்டிற்கு செல்லும் பாதை இதுவல்ல” என அந்த பெண் கூறியவேளை “இந்தப் பாதையாலும் செல்லலாம் எனக்கூறிய சிறுவன் நடுக்காட்டினை சென்றடைந்தான்.

அதன்பின்னர் தனது சட்டையினை கழற்றி அந்த பெண்ணின் கழுத்தை இறுக்கி, வன்புணர முயன்றுள்ளான். உடனே சுதாரித்துக்கொண்ட பெண் தனது சகோதரன் இந்த பக்கமாக தான் வந்துள்ளான் என்று கூறி சகோதரனது பெயரை சொல்லி கூச்சலிட்டார். இதன்போது குறித்த சிறுவன் அவ்விடத்தில் இருந்து தப்பித்துச் சென்றுள்ளான்.

இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் இன்றையதினம் அச்சிறுவனை கைது செய்துள்ளனர்.

பொலிஸார் கைது செய்யப்பட்ட சிறுவனிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent News