காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட அநாகரீகமான மற்றும் கோழைத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
8 வது நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்று 24 மணித்தியாலங்களுக்குப் பின் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியடிக்கும் நடவடிக்கையானது நாட்டு பிரஜைகளின் உரிமைகளுக்கு எதிராக இருண்ட கண்ணோட்டத்தினை உருவாக்குகிறது என மேலும் தெரிவித்துள்ளது.