Wednesday, December 25, 2024
HomeLatest Newsஆர்ப்பாட்டகாரர்கள் மீதான தாக்குதல் வெறுக்கத்தக்கது- ஓமல்பே சோபித தேரர் கண்டனம்!

ஆர்ப்பாட்டகாரர்கள் மீதான தாக்குதல் வெறுக்கத்தக்கது- ஓமல்பே சோபித தேரர் கண்டனம்!

செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் வெறுக்கத்தக்கது மற்றும் கொடூரமானது. இது வன்மையாகக் கண்டிக்கப்படுகிறது. இவ்வாறு போராட்டத்தை கட்டுப்படுத்தும் திறன் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இருந்ததாகவும் ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை எனவும் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து 24 மணித்தியாலங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இதுவரை சரியான சர்வதேச அங்கீகாரம் கிடைக்கவில்லை.

மக்கள் போராட்டங்களை ஆயுத பலத்தால் ஒடுக்குவதற்கு இடமளிக்க வேண்டாம் என அண்மையில் சர்வதேச சமூகம் அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தது. அரசுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இவ்வாறான நிலையில், ஆயுதம் ஏந்தாமல் ஜனநாயகக் கோரிக்கைகளை முன்வைக்கும் போராளிகள் மீது நள்ளிரவில் ஆயுதப் படைகள் பயங்கரவாதக் குழுவின் பாணியில் தாக்குதல் நடத்துவது வெட்கக்கேடானது.

கோத்தபாய ராஜபக்ச அவர்களுக்கும் இவ்வாறே மக்கள் போராட்டத்தை அடக்கும் திறமை இருந்தது. ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோத்தபாய ராஜபக்சவை விட கடுமையான தீர்மானம் எடுப்பவர் என்பதை நாடு புரிந்துகொண்டுள்ளது.

Recent News