Wednesday, December 25, 2024
HomeLatest Newsபுதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு இன்று!

புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு இன்று!

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பை முன்னிட்டு இன்று பாராளுமன்ற வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பெரும் எண்ணிக்கையிலான முப்படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று பாராளுமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிலிருந்து தப்பிச் சென்றதையடுத்து, வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கு ஒருவரை தெரிவு செய்ய இன்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

டலஸ் அழகப்பெரும, ரணில் விக்கிரமசிங்க, அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News