Thursday, December 26, 2024
HomeLatest Newsஜனாதிபதி தெரிவு: திடீரென தீர்மானத்தை மாற்றிக் கொண்ட சுதந்திரக் கட்சி!

ஜனாதிபதி தெரிவு: திடீரென தீர்மானத்தை மாற்றிக் கொண்ட சுதந்திரக் கட்சி!

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் சுதந்திரக் கட்சி பங்கேற்கும் என அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருடன் கலந்துரையாடி யாருக்கு ஆதரவு என்பது குறித்து தீர்மானிப்போம் என கூறினார்.

வாக்கெடுப்பை நடத்தாமல் கலந்துரையாடி நியாயமான தீர்மானத்தை எட்ட அவர்கள் முடிவு எடுக்க வேண்டும் என்றும் தயாசிறி ஜயசேகர கேட்டுக்கொண்டார்.

சுதந்திரக் கட்சி ஒருபோதும் வாக்களிப்பை புறக்கணிக்க போவதாகக் கூறவில்லை, அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடிய பின்னரே இறுதித் தீர்மானம் என தெரிவித்தார்.

Recent News