Thursday, December 26, 2024
HomeLatest Newsபுதிய ஜனாதிபதி பதவிக்கு போட்டிபோடும் முக்கியஸ்தர் வெற்றிபெற யாகபூஜை

புதிய ஜனாதிபதி பதவிக்கு போட்டிபோடும் முக்கியஸ்தர் வெற்றிபெற யாகபூஜை

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்திற்குள் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் முக்கியஸ்தர் ஒருவரின் வெற்றிக்கு ஆசி வேண்டி, சிறப்பு யாகம் நடத்தப்பட்டுள்ளது.

மொனராகலை சியம்பலாவ கெபலித்த காட்டில் உள்ள முருகன் கோயிலில் கடந்த 16 ஆம் திகதி இந்த யாகம் நடத்தப்பட்டுள்ளது.

அதிகாலை ஒரு மணிக்கு ஆரம்பமான யாகபூஜை அதிகாலை 5 மணி வரை நடத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த ஒருவரே இந்த யாகத்திற்கான முழு செலவுகளையும் பங்களிப்பையும் வழங்கியுள்ளார்.

இவர் இலங்கையின் முன்னணி வர்த்தகர்களில் ஒருவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News