உக்ரைன் போரினால் இலங்கையில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரிசி உற்பத்தி 16 மெட்ரிக் தொன்னாக குறைந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உர இறக்குமதி தடைக்கு முன் 24 தொன்னாக இருந்தது.
வரும் செப்டம்பர் – ஒக்டோபர் மாதங்களில் தொடங்கும் பருவத்தில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் உரங்களுக்காக 600 மில்லியன் டொலர்கள் செலவிடப்படும்.
இலங்கையின் பொருளாதாரம் இவ்வருடம் 6 சதவீதத்தால் குறையும் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த ஆண்டு பெருமளவிலான வேலைகள் இழக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
கிடைக்கக்கூடிய முதல் சந்தர்ப்பத்தில் உக்ரைனில் போர் நிறுத்தப்பட வேண்டும் என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உலக பட்டினி மற்றும் பஞ்சம் குறித்த சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட அவர்,
ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளால் 3 ம் உலக நாடுகள் அதிகம் பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவை மண்டியிட வைக்காது. ஆனால் மூன்றாம் உலக நாடுகளை மண்டியிடச் செய்யும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
உக்ரைன் போர் தொடர்ந்தால், உலகம் முழுவதும் அதிகமான மக்கள் பட்டினியால் இறப்பார்கள் என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
ரஷ்யா உடனடியாக போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். உக்ரைனும் தனது அண்டை நாடுகளுக்கு நிபந்தனைகளை விதிக்காமல் பேச்சு நடத்த தயாராக இருக்க வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கூறினார். ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக முழு உலகையும் பிணைக் கைதிகளாக வைத்திருக்க முடியாது எனவும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.