பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாக்கிஸ்தான் சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களிடம் உதவிக் கோரிக்கைகளை விடுத்து வரும் நிலையில் அண்மைக் காலமாக சர்வதேச அமைப்புக்கள் உதவிகள் எவற்றையும் பாக்கிஸ்தானுக்கு, சீனாவின் தலையீடு காரணமாக வழங்காமல் தாமதித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது சர்வதேச நாணய நிதியம் சில உதவிகளை வழங்குவதற்கு முன்வந்திருக்கின்ற நிலையில், உலக வங்கியும் பாக்கிஸ்தானுக்கு உதவிகளை வழங்க முன்வந்திருக்கின்றது.
உலக வங்கி பாக்கிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயத்தை ஊக்கவிக்கும் வண்ணம் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.
உலக வங்கி தெரிவித்த தரவுகளின் படி பாக்கிஸ்தானில் சுமார் 73 வீதமான விவசாய உற்பத்திகள் பஞ்சாப் மாநிலத்தில் இருந்தே உற்பத்தியாவதாகவும் எனவே விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும், பாக்கிஸ்தானில் உணவுப் பஞ்சம் ஏற்படாமல் தடுக்கும் திட்டத்துடனும் மேற்படி உதவி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.