Wednesday, December 25, 2024
HomeLatest Newsபாராளுமன்றத்தில் பிளவு ஏற்படும் – மைத்திரி எச்சரிக்கை!

பாராளுமன்றத்தில் பிளவு ஏற்படும் – மைத்திரி எச்சரிக்கை!

ஜனாதிபதி வேட்பாளராக பல வேட்பாளர்கள் முன்மொழியப்படும் தற்போதைய சூழ்நிலை பாராளுமன்றத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி,

முன்மொழியப்பட்ட மூன்று வேட்பாளர்களில் யார் வெற்றி பெற்றாலும் அது பிளவை உருவாக்கும் எனவும், ஜனாதிபதித் தேர்தலுக்கு தனி வேட்பாளரை கட்சித் தலைவர்கள் கலந்துரையாடி முன்மொழிவதே சிறந்த மாற்று வழி எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்திற்குள் ஏற்பட்டுள்ள இந்த பிளவு இனி வரப்போகும் எந்தவொரு அரசாங்கத்திற்கும் ஒரு பிரச்சினையாகவே முடிவடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை எனவும், வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டதன் பின்னர் இணக்கப்பாட்டிற்கு வரும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், தற்போதுள்ள வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Recent News